மத்திய கிழக்கில் போர் பதற்றம்; இலங்கையின் விமான சேவை வழித்தடம் மாற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; இலங்கையின் விமான சேவை வழித்தடம் மாற்றம்!

editor 2

மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் போர் பதற்றத்தால் குறித்த பிராந்தியத்தில் சில வான்வெளி மூடப்பட்டுள்ளதன் காரணமாக தங்களது விமானங்களின் வழித்தடத்தை மாற்றியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. 

அதன்படி, மோதல் வலயத்தைத் தவிர்ப்பதற்காக லண்டன் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளுக்கான வழித்தடங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

மாற்று வழித்தடத்தில் விமானங்கள் பயணிப்பதால் பயணத்துக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டிய ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக உதவிகளுக்காக இலங்கையிலிருந்து 1979 என்ற இலக்கத்துக்கும் சர்வதேச நாடுகளிலிருந்து 94 11 777 1979 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

Share This Article