ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி – 7 உச்சி மாநாடு மே 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, இந்தியப் பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, “உலகில் உக்ரைன் போர் மிகப் பெரிய ஒரு விடயமாகும். இதனைப் பொருளாதாரம், அரசியல் சார்ந்த ஒரு விவகாரம் என்றளவில் மட்டும் நான் பார்க்கவில்லை. இது மனித இனத்துக்கான விவகாரமாகும். போருக்கான தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவும், நானும் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம்” – என்று இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.