நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் மேலோங்கப்படுவது ஒரு சாதகமான நகர்வாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மெரியட் கோட்யாட் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற மதிப்பீடு சம்மேளனத்தின் 2025, மதிப்பீட்டு செயன்முறைகளின் எதிர்காலம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் வெளிப்படுவது நேர்மறையான போக்காகும். பல தரப்பினரின் பங்கேற்பினை காணக் கிடைக்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.
இந மாநாடானது அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பரந்த சமூக தரப்பினர்களுக்கான ஒரு மேடையாகும்.