பாதாள உலகம் நாட்டை ஆளுகிறது – வீரவன்ச!

பாதாள உலகம் நாட்டை ஆளுகிறது - வீரவன்ச!

editor 2

பொதுமக்களைக் கொல்வது நாட்டில் ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. இப்போது பாதாள உலகம் நாட்டை ஆளுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர்,

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்குமுறைகளையும் பாதாள உலக நபர்கள் அமுல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த நாடு அடைந்துள்ள இந்த நிலைமை குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.

கதைகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இந்த விடயத்தில் மௌன நிலைப்பாட்டை கடைப்பிடிப்பது எங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது – என்றார்.

Share This Article