மின்னல் தாக்கி புதுக்குடியிருப்பில் ஒருவர் மரணம்!

மின்னல் தாக்கி புதுக்குடியிருப்பில் ஒருவர் மரணம்!

editor 2

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

தற்போது சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கள்ளியடி வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் மீது மின்னல் தாக்கிய நிலையில் அவர்
உயிரிழந்துள்ளார்.

சடலம் புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தில் 42 வயதான அருமைநாயகம் யசோதரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

Share This Article