வடக்கு பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம்

editor 2

வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று நண்பகல் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு மகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article