மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளையதினம் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வெப்பநிலை 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.