தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!

editor 2

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தலில்-

மே 2ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மே 3 ஆம் திகதி காலை 8.00 மணி வரை, நாம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்.

தொழிற்சங்கப் போராட்டத்திற்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் , அவசர அவசரமாக வடமாகாண சுகாதார சேவைகள் செயலாளர் பணிமனையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலின் இறுதியில் அடையப்பட்ட முடிவுகளின் பிரகாரம், வைத்தியசாலை நிர்வாகியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிப்பதற்குரிய உத்தியோகபூர்வ கடிதம் மாகாண சுகாதார சேவைகள் செயலாளரினால் வழங்கப்படுவதாக இருந்த போதிலும், உத்தியோகபூர்வக் கடிதத்தில் தீர்க்கமான விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும் இந்த வேலைநிறுத்தத்தின் மூலம், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் அக்குறைபாடுகளால் மருத்துவ சேவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மருத்துவர்களுக்கான பாதுகாப்பற்ற பணிபுரியும் சூழ்நிலை ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த முடிந்துள்ளது.

இது ஒரு நாள் வேலைநிறுத்தம் என்பதால் மே 3ஆம் திகதி காலை 8.00 மணியளவில் எங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த உள்ளோம்.

எனினும், எங்கள் போராட்டக் கோரிக்கைகளில் உறுதியாக இருந்து, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்போம்.

எங்கள் சக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் எம்மீது காட்டும் பேராதரவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்- எனன்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தலில்-

மே 2ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மே 3 ஆம் திகதி காலை 8.00 மணி வரை, நாம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்.

தொழிற்சங்கப் போராட்டத்திற்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் , அவசர அவசரமாக வடமாகாண சுகாதார சேவைகள் செயலாளர் பணிமனையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலின் இறுதியில் அடையப்பட்ட முடிவுகளின் பிரகாரம், வைத்தியசாலை நிர்வாகியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிப்பதற்குரிய உத்தியோகபூர்வ கடிதம் மாகாண சுகாதார சேவைகள் செயலாளரினால் வழங்கப்படுவதாக இருந்த போதிலும், உத்தியோகபூர்வக் கடிதத்தில் தீர்க்கமான விடயங்கள்எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும் இந்த வேலைநிறுத்தத்தின் மூலம், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் அக் குறைபாடுகளால் மருத்துவசேவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்,

மருத்துவர்களுக்கான பாதுகாப்பற்ற பணிபுரியும் சூழ்நிலை ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த முடிந்துள்ளது.

இது ஒரு நாள் வேலைநிறுத்தம் என்பதால் மே 3ஆம் திகதி காலை 8.00 மணியளவில் எங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த உள்ளோம்.

எனினும், எங்கள் போராட்டக் கோரிக்கைகளில் உறுதியாக இருந்து, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளை
மீண்டும் ஆரம்பிப்போம்.

எங்கள் சக ஊழியர்கள், பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் எம்மீது காட்டும் பேராதரவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்- என்றுள்ளது.

Share This Article