25 ஆண்டுகள் பணியாற்றிய ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!

25 ஆண்டுகள் பணியாற்றிய ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!

editor 2

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அதன்படி இன்று (01) முதல் ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவில் 23 வருடங்கள் பணியாற்றியுள்ளதாகவும் , அவரது பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக 15 வருடங்கள் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article