தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கைதாவர்?

தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கைதாவர்?

editor 2

உள்ளூராட்சி சபைகள் தேர்தல் முடிவடைந்த பின்னர் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன
என்று தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் தெரிவித்துள்ளார்.

மன்னார் – உப்புக்குளத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘இன்னும் சில தினங்களில் உள்ளூராட்சி சபைகள் தேர்தல் நடைபெறவுள்ளது.

நான் தற்போதைய ஒரு பிரதி அமைச்சர். நான் எனது வாகனத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ‘வி. ஐ. பி லைற்’றை பயன்படுத்தவில்லை. நான் தான் இந்தப் பகுதியின் அரசியல்வாதி என்று காட்டுவதற்காக ‘வி. ஐ. பி. லைற்’றை பயன்படுத்துகின்றனர். வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தாராபுரம் போனால் அடிப்பார்கள் என்று கூறினார்கள்.

நான் தாராபுரம் சென்றமை எவ்வித கலந்துரையாடலுக்கும் இல்லை. இந்த நாட்டில் வன்முறை அரசியல் இல்லாமல் போகும். திருட்டு அரசியல் இல்லாமல் போகும். தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போயுள்ளனர்.

நிறைய பேரின் கோப்புகள் மேலே வந்துள்ளன. இந்த உள்ளூராட்சி சபைகள் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மக்கள் சொத்துகளை திருடியவர்கள், மக்களின் சொத்துகளை தவறாக பயன்படுத்தியவர்கள், மக்களை அச்சுறுத்தியவர்களுக்கு நாங்கள் நிச்சயமாக அதற்கான தண்டனையை வழங்குவோம்’ – என்றார்.

Share This Article