அதிக வெப்பம் காரணமாக யாழில் முதியவர் மரணம்!

அதிக வெப்பம் காரணமாக யாழில் முதியவர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இணுவிலை சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார். இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் நேற்று
முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து,

பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைத்தனர்.

மரண விசாரணையில் அதீத வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு
மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article