நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மத்திய, மேல், ஊவா, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.