மின்னல் தாக்கி அனுராதபுரத்தில் ஐவர் வைத்திய சாலையில்!

editor 2

அனுதாபுரம் அபய வாவிக்கு இன்று (27) நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவொன்று மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு யுவதி இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்களில் இருவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது அனுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This Article