அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, பொத்துவில் ஏ-04 பிரதான வீதியின் தாண்டியடி பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்தது.
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற கார் ஒனறு வீதியில் திடீரென குறுக்கறுத்த மாடு ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தை உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது .
குழந்தை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தது.
அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 9 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சரீரம் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.