உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத்மௌலானாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைமாவட்ட தொடர்பாடல் இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத்மௌலானா முக்கியமானவராக காணப்படுகின்றார்
சனல் 4 ஆவணப்படத்திற்கு தகவல்களை வழங்கிய ஆசாத்மௌலானாவை விசாரணை செய்தால் பல விபரங்கள் தெரியவரலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகள் கிறிஸ்தவ திருச்சபையுடன் தகவல்களை வழங்கி வருகின்றனர்.
விசாரணைகள் இடம்பெறும் விதம் குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சுமார் 25 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் இந்த சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் தெரிந்தவர்கள்.
கத்தோலிக்க சமூகத்தினரும் இலங்கையர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதிக்காக காத்திருக்கின்றனர், ஜனாதிபதி இந்த தாக்குதல்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்துவார் விசாரணைகளை முன்னெடுத்துசெல்வார் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.