பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறானவர்கள் தொடர்பிலான நீண்ட பட்டியலொன்று காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லும் எவரும் தாம் குற்றம் இழைத்து விட்டதாக கூறுவதில்லை.
தான் திருடியதாகவோ அல்லது கொள்ளையடித்ததாகவோ எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கைது செய்யப்படு நபர்கள் அரசியல் பழிவாங்கல் என தங்களது குற்றங்களை நியாயப்படுத்தி வருகின்றனர்.
ஊடகங்களில் இவ்வாறு கூறினாலும் நீதிபதியின் முன்னிலையில் இவ்வாறு அரசியல் பழிவாங்கல் என கூற முடியாது.
இவ்வாறு குற்றம் சுமத்துவோருக்கு இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளே இவ்வாறு அரசாங்கத்தின் மீது பழி சுமத்த முடியும். மாகாண சபைத் தேர்தல்களும் நடத்தப்
பட்டதன் பின்னர் இவ்வாறு பழி சுமத்த முடியாது -என்றார்.