சிறுபோகத்திற்கான உரங்கள் கிடைக்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுபோகத்திற்கான உரங்கள் கிடைக்கவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு!

editor 2

இந்த ஆண்டு சிறுபோகத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரங்கள் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேனாநாயக்க சமுத்திரத்தின் கீழ் பயிர்ச்செய்கை செய்யும் அம்பாறை மற்றும் சமாதானபுரம் விவசாயிகள் இந்த ஆண்டு சிறுபோகத்திற்கான பயிர்செய்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சிறுபோகத்துக்கான நாற்று நடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்த விவசாயிகள், எனினும் அரசாங்கத்தால் மானிய விலையில் வழங்கப்படும் உரம் இதுவரை எந்த விவசாயிக்கும் கிடைக்கவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share This Article