தென்னக்கோனுக்கு பிணை!

editor 2

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோனை பிணையில் விடுதலை செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.

தேசபந்து தென்னக்கோன் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்திரவை அவமதித்து சுமார் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article