சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், கொழும்பு குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் நேற்று காலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் கொண்டுவந்த பயணப்பொதிகளிலிருந்து 35 மடிக்கணினிகள், 3 கணினிகள், 10 ஐ போன்கள், 100 சிம் கார்டுகள் மற்றும் ஒரு தொகை காலணிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.