இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இவ்வருடம் வேறு எந்த தேர்தலும் இடம்பெறாது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (01) பாணந்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தால் அரசியல் தலைவர்கள் எவருக்கும் வாகன பேமிட் வழங்கப்பட மாட்டாது. அரசியல் தலைவர்களுக்காக வழங்கப்படும் சலுகைகளை குறைப்பதே எமது நோக்கம். அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் பணிபுரிவதற்கு அத்தியாவசியமான வளங்கள் வழங்கப்படும் அதனைக் கொண்டு கடமையாற்றுங்கள். நாட்டின் பொருளாதாரம் ஸ்த்திர நிலையை அடையும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அரச வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றம் அமைதியாக செயற்படுகிறது. இந்த அரசியல் கலாசாரமே நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த அடித்தளமாக உள்ளது. நாட்டை மறுசீரமைப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒரு தேசிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது அவசியம்.
ஆகையால் அத்திட்டத்தின் படி பாணந்துறை மட்டுமல்லாது அனைத்து உள்ளூராட்சிப் பிரிவுகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். இம்முறை தேர்தலில் சுமார் 70 சதவீத மக்களின் வாக்குகளால் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுகிறேன்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற மாட்டார் எனக் கூறிய நபேரே பொதுமக்களால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு நாம் கோரவில்லை. எனினும் மக்கள் எம்மை வெற்றிப்பெறச் செய்தனர்.
அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றிய கட்சியாக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அது பதிவாகியுள்ளது. அதேபோல் உள்ளூராட்சி பலதையும் எமக்கு பொதுமக்கள் அளிபார்கள் என்ற நம்பிகையுள்ளது. இது மிகவும் அவசியம்.
நாள்தோறும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் இவ்வருடம் வேறு எந்த தேர்தலும் இடம்பெறாது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.