வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (2) 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஆணைக்குழு ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முன்னெடுத்த நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2014 க்கு இடைப்பட்ட காலத்தில் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, அப்போது அவரது தனிப்பட்ட செயலாளராக இருந்த சாந்தி சந்திரசேனவுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சம்பளத்தில் எரிபொருள் கொடுப்பனவு சேர்க்கப்பட்டிருந்த போதிலும், எரிபொருள் ஆர்டர்கள் மூலம் 2.6 ரூபாய் மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியது மற்றும் இந்த சலுகைகளை வழங்க அரசாங்க அதிகாரிகளை வற்புறுத்தியதை குற்றச்சாட்டுகள் விவரித்தன.
விரிவான விசாரணைக்குப் பிறகு, வழக்குத் தொடுப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக நீதிபதி தீர்மானம் செய்தார்.
இதன் விளைவாக, இரு பிரதிவாதிகளும் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு அதற்கேற்ப தண்டனை விதிக்கப்பட்டனர்.