தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 50,000 ரூபாயினை கையூட்டலாக வழங்க முற்பட்ட ஒருவர், குறித்த காவல்நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்குமாறு கோரி இந்த கையூட்டலை அவர் வழங்க முற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான பல முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.