வவுனியாவில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் தங்கச் சங்கிலியை அறுத்த பெண்கள்!

வவுனியாவில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் தங்கச் சங்கிலியை அறுத்த பெண்கள்!

editor 2

வவுனியா, நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை பூங்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த போது அச் சிறுமியின் அருகில் சென்ற இரு பெண்கள் அச் சிறுமியுடன் கதைப்பது போன்று கதைத்து சிறுமி அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article