அடுத்த மாதம் இலங்கை வருகிறார் மோடி!

அடுத்த மாதம் இலங்கை வருகிறார் மோடி!

editor 2

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரவின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடி 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 முதல் 4 ஆம் திகதிகளில் தாய்லாந்தின் பேங்கொக்கிற்கு விஜயம் மேற்கொள்வார். அதனை தொடர்ந்து, ஏப்ரல் 4 முதல் 6 திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தில் பங்கேற்க உள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share This Article