நாட்டின் வான் பரப்பு முதன் முறையாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி மூடப்படவுள்ளது.
எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எவ்.ஆர். ஏ. எம். – 2 மிஷனுக்காகவே சில மணி நேரம் நாட்டின் வான் பரப்பு மூடப்படுகிறது.
வான் பரப்பு மூடப்படுவதால் மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான பயணங்களில் எந்தத் தடங்கலும் அல்லது மாற்றமும் ஏற்படாது.
எனினும், கிழக்கு திசை நாடுகளான சிங்கப்பூர், பாங்கொக், பீஜிங், அவுஸ்திரேலிய ஆகியவற்றுக்கான விமான பயணங்களுக்கான நேரங்களில் மாற்றம் ஏற்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது