அனுராதரபுரம் வைத்தியர் விவகாரம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

அனுராதரபுரம் வைத்தியர் விவகாரம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

editor 2

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தே நபரை அடையாளங் காண்பதற்கான அணிவகுப்பு இரண்டாவது நாளாக இன்றைய தினமும் இடம்பெறவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் இன்றைய தினமும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இதன்காரணமாகவே அடையாள அணிவகுப்பு இடம்பெறவில்லை என நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article