தேர்தலுக்காக முன்னணியுடன் இணையவில்லை – சிவாஜிலிங்கம்!

தேர்தலுக்காக முன்னணியுடன் இணையவில்லை - சிவாஜிலிங்கம்!

editor 2

தேர்தலை இலக்காகக் கொண்டு தங்களது தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணையவில்லை எனத் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். 

தற்போது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளதின் காரணமாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்ததாக எம். கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். 

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article