நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த இரண்டு தரப்புக்கள் அதிலிருந்து வெளியேறியிருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வி.மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமைக்கட்சி ஆகிய இரண்டு தரப்பும் சங்கு கூட்டணியிலிருந்து ஒதுங்குவதென முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சமத்துவக் கட்சியின் தலைவருமான மு.சந்திரகுமார் சங்கு கூட்டணிக்குள் புளொ்ட் தலைவர் சித்தார்த்தனின் சிபார்சின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இரண்டு தரப்பும் சங்கு கூட்டணியினை புறக்கணித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இருந்தபோதிலும் இரண்டு தரப்பும் தேர்தலை தனித்தோ இணைந்தோ எதிர்கொள்ளும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.