பார்வையிழந்த மூதாட்டி அவரது வீட்டு வளவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கைச் சேர்ந்த பிறவுண்ராசா நாகேஸ்வரி (வயது -78) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டியின் கணவன் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது சகோதரரான வயோதிபருடன் மூதாட்டி வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டு வளவில் உயிரிழந்த நிலையில்
அவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.