உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகிறது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகிறது!

editor 2

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 27 ஆம் திகதி கூடவுள்ளது. 

இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதிகள் மற்றும் நேரங்கள் குறித்துக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். 

இதேவேளை, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, அம்பாறையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். 

இந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நிச்சயமாக நடைபெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். 

ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று கண்டியில் தெரிவித்திருந்தார். 

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த சட்டத் தடையும் இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share This Article