அமெரிக்தூதுவர் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு!

அமெரிக்தூதுவர் - இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு!

editor 2

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் கடற்படை தளபதிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. 

இந்த சந்திப்பானது கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. 

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பனாகொடவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.


Share This Article