கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் – பாலாவியில் வைத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
34 வயதுடைய மொஹமட் அஸ்மான் செரீப்டீன் எனப்படும் முன்னாள் கொமாண்டோ படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


