எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசியம் சார்ந்த சகல கட்சிகளையும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த வைப்பதற்கான முயற்சியை இலங்கை தமிழரசுக் கட்சி முன்னெடுத்துள்ளதாக அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வெற்றிடம் நிலவுவதாகவும் தேவையேற்படுமாயின் அதில் ஏனைய தரப்பினரையும் இணைத்துக் கொள்ள முடியும் எனவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.