வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு இணக்கம்!

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு இணக்கம்!

editor 2

கோதுமை மாவின் விலை குறைப்புக்கு அமைவாக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைப்பதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இணங்கி இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

செரண்ட்டிப் மற்றும் ப்ரீமா மா ஆலை நிறுவனங்கள், கோதுமை மாவின் விலையைக் கிலோ ஒன்றுக்கு 10 ரூபா படி குறைப்பதற்குத் தீர்மானித்திருந்தன. 

எவ்வாறாயினும் கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் படி கோதுமை மாவின் விலையைக் குறைக்காமல், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது என்று வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. 

இந்தநிலையில் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இணங்கி இருப்பதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

Share This Article