மன்னார் – மன்னார் வீதியில் விபத்து! ஒருவர் பலி!

மன்னார் - மன்னார வீதியில் விபத்து! ஒருவர் பலி!

editor 2

வவுனியா – மன்னார் வீதியில் 17ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்…

17ஆம் திகதி திங்கட்கிழமை மாலை குறித்த நபரும் மற்றொருவரும் பறயநாளங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளதுடன் அதில் பயணித்த மற்றயநபர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த நிமல் வயது 35 என்ற நபரே சாவடைந்தார்.

விபத்துச்சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article