நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

editor 2

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இன்று இயக்கப்படவிருந்த கப்பல் சேவை தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் 15 ஆம் திகதியளவில் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கப்பல் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவம்பர் 18 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article