தையிட்டி விவகாரம்; கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை!

தையிட்டி விவகாரம்; கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை!

editor 2

தையிட்டி விகாரைக்கு எதிராக கஜேந்திரகுமார் எம்.பி. விடுத்தார் என்று கூறப்படும் போராட்ட அழைப்பு தொடர்பில் மல்லாகம் நீதிமன்றம் கஜேந்திரகுமார் எம்.பிக்கு நேற்று அழைப்பாணை அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இது தொடர்பில் கஜேந்திரகுமார் எம். பி. தெரிவித்தவை வருமாறு,

‘ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

‘இதன் பின்னர் – ‘விகாரையை இடிக்க வாரீர்’ என்று நான் அழைப்பு விடுத்தமை போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட்டு போலியான விஷமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை அறிந்தவுடனேயே எனது உத்தியோகபூர்வ முகநூல், எக்ஸ் தளங்களூடாக குறித்த செய்தி போலியானது என பதிவிட்டேன். ஊடக சந்திப்பிலும் போலி விளம்பரம் குறித்த எனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.

‘எனது தெளிவுபடுத்தல்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்து வரும் வெள்ளிக்கிழமை அழைப்பு
கட்டளை எனக்கு அனுப்பப்பட்டுள்ளது’, என்றார்.

Share This Article