அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலனறுவை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற “நாமலுடன் கிராமத்துக்குக் கிராமம்” விசேட வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சியில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் மீது கொண்ட அதீத நம்பிக்கை காரணமாகவே மக்கள் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினார்கள் என நான் நினைக்கின்றேன்.
பெரும்பாலானவர்கள் மாற்றத்தைக் கோரியே இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தனர்.
இருப்பினும் இந்த அரசாங்கம் கூறிய உண்மைக்குப் புறம்பான விடயங்களால் அந்த மக்களுக்கு ஏதோவொரு வகையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் தற்போது வழமையான அரசியல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.