சில மாதத்துக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் யாழில் மீட்பு!

சில மாதத்துக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் யாழில் மீட்பு!

editor 2

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் இன்று (6) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளே நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து மருதங்கேணி பொலிஸாரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share This Article