யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டுக்குச் சென்று இன்று (31) அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கடந்த புதன்கிழமை (29) காலமானார்.
அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மாவை சேனாதிராசாவின் பூதவுடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மாவை சேனாதிராசாவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெறவுள்ளன.