அரசாங்கத்தினால் எந்த பிரச்னைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத நிலைப்பாடே தற்போது ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசியப்பொருட்கள், மின்கட்டணம் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் கூறியது.
அத்துடன் அரிசிப் பிரச்னை குறித்த விடயத்தில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுகின்றமையையே அவதானிக்க முடிகின்றது. அரசாங்கத்தினால்
உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முடியவில்லை – என்றார்.