அனுமதியில்லாத கைபேசிகளை தடுக்க மென்பொருள் அறிமுகமாகிறது!

அனுமதியில்லாத கைபேசிகளை தடுக்க மென்பொருள் அறிமுகமாகிறது!

editor 2

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து, பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் இடு தொடர்பில் கூறியதாவது:

“எமது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகளை தடுக்க விரைவில் ஒரு தானியங்கி அமைப்பைச் செயல்படுத்துவோம்.”

“அங்கீகாரம் இல்லாத தொலைபேசிகளால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத செயல்களைத் தடுப்பது மற்றும் நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.”

இதனுடன், சந்தையில் சட்டப்பூர்வமான கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Share This Article