முத்தையன்கட்டு, தண்ணிமுறிப்புக் குளங்களின் நீர் மட்டங்கள் அதிகரிப்பு! மக்களுக்கு எச்சரிக்கை!

முத்தையன்கட்டு, தண்ணிமுறிப்புக் குளங்களின் நீர் மட்டங்கள் அதிகரிப்பு! மக்களுக்கு எச்சரிக்கை!

editor 2

தற்போதைய மழையால் முத்தையன் கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் நீரி அதிகரித்து வருகிறது. எனவே, குளத்தின் வாயில்களைக் கூடுதலாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளோம் என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது முத்தையன் கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளம் இயற்கையாகவே வான் பாய்வதுடன் வாயில்களை சிறிய அளவில் திறந்துள்ள நிலையில் உள்ளது. இருப்பினும், நீர்மட்டத்தை குறைக்க வாயில்களை மேலும் திறக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

அதனால், மக்கள், நிலைமையை கவனத்தில் கொள்ளுங்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக கிராம சேவகரை தொடர்பு கொண்டு பாதுகாப்பு மையங்களுக்கு நகர்ந்து செல்லவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article