நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனங்கள் வழங்க நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனங்கள் வழங்க நடவடிக்கை!

editor 2

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று முன் தினம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அமைச்சர்
இதனைக் கூறினார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டார்.

Share This Article