திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உள்ளிட்ட தரப்பினர் குறித்த எண்ணெய் தாங்கிகளை அண்மையில் பார்வையிட்டதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
500 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 24 தாங்கிகளின் முழுமையான உரிமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு உரித்தானதாகும்.
அவற்றைப் பயன்படுத்தி எரிபொருளைக் களஞ்சியப்படுத்துவதன் மூலம் சர்வதேசக் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு கூறியுள்ளது.
அதற்கமைய திருகோணமலை துறைமுக முனையத்தை யும் அபிவிருத்தி செய்ய
திட்டமிடப்பட் டுள்ளது.