சுகாதார சேவைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியிடுதல் தொடர்பாக, அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் மனுஜ் சி வீரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைக் கையளித்துள்ளார்.
நேற்று கையளிக்கப்பட்ட குறித்த முறைப்பாட்டில் அரசாங்க சுகாதார சேவைகளை சீர்குலைக்க அல்லது சீர்குலைக்கும் நோக்கத்தில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.