அம்பாந்தோட்டையில் விபத்து; ஒருவர் காயம்!

Editor 1

அம்பாந்தோட்டை, சிப்பிகுளம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கவனக்குறைவாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ளார்.

Share This Article