ரோஹிங்கியா ஏதிலிகள் 12 பேரும் முல்லைத்தீவுக்கு!

Editor 1

விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா ஏதிலிகள் 12 பேரும் நேற்று
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து
விடுவிக்கப்பட்டனர்.

குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த ஏதிலிகள் 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டு ஏனைய ஏதிலிகளுடன்
தங்க வைப்பதற்காக முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Share This Article