அரசாங்கம் தம்முடைய இயலாமையை மறைக்க ஊடகங்களை விமர்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஊடகங்களுக்கு பாரிய சுதந்திரத்தை வழங்கியுள்ளோம் என்பதே எம்முடைய அரசாங்கத்துக்கு இருந்த குற்றச்சாட்டாகும். ஊடகங்களும் சரி சமூக ஊடகங்களும் சரி ராஜபக்ஷர்கள் தொடர்பில் அதிக குற்றச்சாட்டுக்களை
முன்வைத்தன.
இந்நிலையில் நாம் ஊடகங்களுக்கு வழங்கிய சுதந்திரத்தின்
காரணமாகவே அவ்வாறு அனைவராலும் செயற்பட முடிந்தது.
இந்நிலையில் ஏன் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவில்லை என்பதே தற்போது எம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகவுள்ளது.
அரசாங்கம் தம்முடைய இயலாமையை மறைக்க ஊடகங்களை விமர்சிக்கின்றது.
அவ்வாறு அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது – என்றார்.