கடந்த சில நாட்களாக நவ்யா ஸ்ரீக்கு நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்து வந்தது. வயிற்று வலிக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றனர். ஆனால் வயிற்று வலி குறையவில்லை.
ஆந்திர மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள் ஆபரேசன் மூலம் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.
இதற்கு அவரது கணவர் மற்றும் உறவினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து நவ்யா ஸ்ரீக்கு ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது ஆபரேசன் செய்த டாக்டர்கள் நவ்யாஸ்ரீயின் வயிற்றில் துணியை மறந்து வைத்து தைத்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நவ்யா ஸ்ரீக்கு நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்து வந்தது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றனர். ஆனால் வயிற்று வலி குறையவில்லை.
இதையடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் துணி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நவ்யா ஸ்ரீக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த துணி அகற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. கலெக்டர் யாஸ்மின் பாஷா நவ்யா ஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து டாக்டர் மற்றும் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்